என் மனதை புண்படுத்த வேண்டாம்! விஜய்யின் உருக்கமான அறிக்கை!

சரியாக புலி வெளியாவதற்கு முதல் நாள் நடிகர் விஜய் மற்றும் சில திரையுலக புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விஜய் கடந்த ஐந்தாண்டுகளாகவே முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்பதை போல தகவல்கள் பரவின. இதையடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

‘வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று. கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா என்று சோதனையிட்டார்கள்.

நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்று அவர் கூறியுள்ளார்.

5 Comments
  1. Nanban says

    Periya Appa takkar Ivar Periya unmaiyin singaram, mothala aakiramippu panni kattina Shobha mahala idi apram paesalam.

  2. writer suprajaaa says

    Income tax people said not all the income shown on or revealed on returns.

    1. mahesh says

      Yaruda ni

  3. இளைய பாரதி says

    வருமான வரி ஏய்ப்பு செய்யாமல் இது வரை இவன் நேர்மையாக வருமான வரி கட்டி இருந்தால், தனது நேர்மையை நீருபிக்க வேண்டியது தானே !!!

  4. Silambarasan says

    அணில் குருவி ரசிகர்களே இப்ப எங்கா கொண்டு போய் உங்க முஞ்சிய வைப்பிங்க???. அந்த தேவாங்கு மூஞ்சிக்கு சப்போர்ட் பண்ணி உங்களை அசிங்கமாக்கி கொண்டீர்கள்!!!.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மண்டப பில்லை கட்டிடுங்க… விஷால் அணிக்கு ரஜினி வைத்த செக்!

‘அவரிடம் ஆசி வாங்கிட்டா போதும்... மற்றதெல்லாம் தூசிதான்’ என்கிற நம்பிக்கையோடு ஒவ்வொரு தேர்தலின் போது அவர் வீட்டு கதவை தட்டுவது அரசியல்வாதிகளின் வாடிக்கை. “நீ வர்றியா? தாராளமா...

Close