குமுதம் டூ கொத்து பரோட்டா! இவர் விருது நகரின் வீச்சு பரோட்டா!

தவுலு, நாதஸ்வரம், சென்ட மேளம், வயலின் அத்தனையையும் தன் அபாரமான எழுத்தில் இறக்கி வைத்து அடிப்பார் முத்துராமலிங்கம்! அவ்வளவையும் இனி இலையில் இறக்கி வைத்து இசை கூட்டுவார் போலிருக்கிறது.

குமுதம், அப்புறம் சினிமாவில் பாலா, அமீருக்கு லெஃப்ட் ரைட் வாழ்க்கை, அதற்கப்புறம் சினேகாவின் காதலர்கள் என்றொரு படத்தை இயக்கியது.. மிக லேட்டஸ்ட்டாக ஜனனம் வார இதழின் பொறுப்பாசிரியர் என்று முத்துராமலிங்கத்தின் அனுபவங்கள், விருது நகர் வீச்சு பரோட்டாவுக்கு சற்றும் சளைத்ததல்ல! அந்த காலத்திலிருந்து வழி வழியாக நளன் பரம்பரையின் ரத்தம் உடம்பு முழுக்க ஓடிக் கொண்டிருக்கும் போல. தானே அவ்வப்போது களத்தில் இறங்கி பிரியாணி கிண்டி பிரண்ட்ஸ்களுக்கு கொடுத்த அனுபவமும், சொந்த ஊரான விருது நகரில் இவரது முன்னோர்கள் அசைவக் கடை நடத்தி அநேகம் பேருக்கு ருசியளித்த அனுபவமும் இணைந்து கொள்ள, ஒரு புதிய முடிவோடு களம் இறங்கியிருக்கிறார்.

பிரபாகரன் உணவகம். இதுதான் அவர் துவங்கியிருக்கும் புதிய உணவகத்தின் பெயர்.

வயிறார உண்டு, மனசார பாராட்ட நினைக்கும் நண்பர்களுக்கு உணவகத்தை நோக்கி செல்கிற வழி ரொம்ப சுலபமானதுதான். சாலிகிராமத்திலிருக்கும் எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டருக்கு அருகாமை சாலையில்தான் அநேக ருசியோடு அமைக்கப்பட்டிருக்கிறது இந்த உணவகம். வாசலில் ஐம்பது கார்களை அட் எ டைமில் கூட விட்டுக் கொள்ளலாம். (தெருவே நம்மளதுதான்)

நியூதமிழ்சினிமாவில் படிச்சுட்டு வந்தேன்னு சொல்லுங்க… பிரியாணியில் ஒரு லெக் பீஸ் எக்ஸ்ட்ரா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Gugan Movie Stills

Close