கவர்ச்சிப் பேய்கள்! செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷா, ஹன்சிகா!

கொடுத்த காசுக்கும் கூடுதலா சிரிச்சுட்டு வரலாம்! அப்படியொரு உத்தரவாதம் சுந்தர்சி படங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த காலத்தில் கவுண்டமணி, அதற்கப்புறம் விவேக், வடிவேலு, சந்தானம் என்று சுந்தர்சி படங்களில் நடிக்கும் காமெடியன்கள் மட்டுமல்ல, கதாநாயகிகளும் சிரிப்பு மூட்டுவார்கள். ஆனால் ஹீரோயின்களை பொறுத்தவரை டபுள் தமக்கா! சிரிக்கவும் செய்யலாம். கண்ணை உற்று உற்று பார்த்து ரசிக்கவும் செய்யலாம். ஏனென்றால் அவர்கள் கிளப்பும் டிரஸ் மூட் அப்படி!

அரண்மனை முதல் பார்ட் எடுத்து சென்னை முதல் குக்கிராமம் வரை தியேட்டரில் சைக்கிள் ஸ்டேன்ட் நடத்துகிறவர் வரைக்கும் சம்பாதிக்க விட்ட சுந்தர்சி, அப்படம் கொடுத்த தெம்பில் பார்ட் 2வையும் எடுத்து நாளைக்கு வெளியிடுகிறார். பார்ட் 3 யும் இருக்கு தெரியும்ல? என்று இப்பவே ரசிகர்களுக்கு ஒரு ஆனந்தத்தை கொடுத்திருக்கிறார் சுந்தர்சி. அட…. தலைப்புக்கு வாய்யா. தண்ணி தவிக்குது என்கிறீர்களா? இதோ வந்தாச்!

சுந்தர்சி இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் நாலாவது படம் இது. “நீங்க இதுல இருக்கணும்” என்று இவர் கேட்க, “நான் இல்லாமலா” என்று அவர் சொல்ல ஒரே பந்தபாச பச்சக் என்று வைத்துக் கொள்ளூங்களேன். ஆனால் “இந்த படத்தில் நீங்க கொஞ்சம் கவர்ச்சியா நடிக்கணும்” என்று கேட்டுக் கொண்டாராம் சுந்தர்சி. இருப்பதை பொதுவில் வைப்போம் என்ற கொள்கையில் லேசு பாசான நம்பிக்கை கொண்ட ஹன்சிகா, “அதுக்கென்ன… ஆஹா, தாராளமா” என்று கூறிவிட்டார். படத்தில் கேமிரா ஹன்சிகா மீது விழுந்து மேயாத குறை என்கிறார்கள் இப்பவே! (ஒரு ரகசியம்… இந்த படத்தில் ஹன்சிகாதான் பேய்)

அதற்கப்புறம் த்ரிஷா. அதென்னய்யா வருஷம் ஏற ஏற இவங்க மெருகேறிக்கிட்டே போறாங்க என்று முட்டு சந்திலும், முனைக்கடையிலும் பேசுகிற அளவுக்கு த்ரிஷாவின் பளபளப்புக்கு திருஷ்டி ஏறிக் கொண்டே போகிறது. விடுவாரா சுந்தர்சி? நீங்களும் ஹன்சிகாவுக்கு நிகரா கவர்ச்சி காட்டணும் என்றாராம். அதென்ன நிகரா? அதைவிட… என்று ஒரு டார்க்கெட் வைத்துக் கொண்ட த்ரிஷா, போட்டி போட்டிருக்கிறாராம் ஹன்சிகாவிடம்.

“நாங்க செக்சியா நடிச்சுருக்கோம்” என்கிறார்கள் இருவருமே பெருமை பொங்க!

மிஸ் கூவாகம் போட்டியவே முழிச்சிருந்து பாக்குற சனம், மிஸ் ஐஸ்க்ரீம்கள் காட்டுகிற இந்த கவர்ச்சியை பக்கெட்ல பிடிச்சாவது கொண்டு போயிட மாட்டாங்களா? ஆமா… அரண்மனை பார்ட் 3 லேயும் இவங்களை வச்சுருப்பீங்களா சுந்தர்சி?

Read previous post:
போகாதீங்க… போகாதீங்க… வெளிநாட்டுக்கு போகாதீங்க!

ஆனந்த விகடனின் வளர்ப்புகள் அவ்வளவாக சோரம் போனதில்லை! அதற்கு சமீபத்தில் வெளிவந்த ‘கத்துக்குட்டி’ படத்தின் இயக்குனர் இரா.சரவணன் ஒரு உதாரணம். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு அழுத்தமான...

Close